ஜெயலலிதா வை வாய்தா ராணி என்று சொன்னவர் இன்று 24 முறை ஜாமீன் பெற்று இப்போது தலைமறைவானவர் என்ற பெயரும் பெற்றார்- முற்பகல் செய்யின்.. என்ற திருக்குறளின் பொருளாகத் திகழ்பவர் ப.சிதம்பரம்!
பணவீக்கத்துக்குக் காரணமான ப.சிதம்பரத்தை அன்றே காறி உமிழ்ந்தார் ஜெயலலிதா.. அதை இன்று வடநாட்டு ஊடகங்கள் சரியாக ஒளிபரப்பு கின்றன.. தமிழக ஊடகங்களோ…??? என்ற கேள்வி எழுப்புகின்றனர் – இந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்டபடி…!
ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றதற்காக அமித் ஷாவை போலி என்கவுன்டர் என்று சொல்லி மூன்று மாதம் சிறையில் வைத்து அசிங்கப் படுத்தினர். அவர் ஒடி ஒளியவில்லை.
மோடியை படாதபாடு படத்தினர். சிபிஐ அலுவலகத்தில் ஒரு முதலமைச்சரை (மோடியை) நாள் பூரா விசாரணை ஏதும் செய்யாமல் வெறுமனே உட்கார வைத்து அசிங்கப் படுத்தியது சிபிஐ (யாரையோ திருப்தி படுத்த ) ஆனால் மோடி ஒடி ஒளியவில்லை.
இருவரும் தைரியமாக எதிர்கொண்டனர். அப்போ காங்கிரஸ் சிபிஐ.,யை தவறாகத் தானே பயன்படுத்தியது.! ஆனால் ஊழல் வழக்கில் ஆதாரங்களுடன் சிக்கிய ஒருவனை நல்லவன், வல்லவன், அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று பேசுவது எந்த விதத்தில் நியாயம்.?
ஊழல்வாதிகள் இதை ஆதரிப்பார்கள். தன் மீது தவறில்லை என்றால் மறைந்திருக்க வேண்டிய அவசியமென்ன. M.P, மந்திரி என்றால் ஊழல் செய்ய லைசென்ஸா என்ன?
இது அரசியல் வாங்குதல் என்றால் மோடி , அமித் ஷா மீது போட்டது என்ன?.
அப்போ கூட்டணியில் இருந்த போதே A. ராசா, கனிமொழி மீது காங்கிரஸ் போட்டது திமுகவை பழி வாங்க வா? அல்லது மிரட்ட வா? – என்கின்றனர் சமூக வலைத்தளன்களில்!
போலி வழக்கு புனைந்து, மோடியையும், அமித் ஷாவையும் விரட்டோ விரட்டென்று விரட்டி தொல்லைக்கொடுத்தது இத்தாலிய அடிமைகளின் அரசாங்கம்!
ஆனால், அவர்கள் ஓடி ஒளியவில்லை! நள்ளிரவில் நீதிமன்றக் கதவை தட்டவில்லை! முன் ஜாமீன் வாங்கவில்லை! ஐயையோ பழி வாங்குகிறார்களே என்று கூச்சல் போடவில்லை! கோ பேக் மன்மோகன் என்று பலூன் விடவில்லை! கட்சிக்காரர்களுக்கு 200 ஓவா கொடுத்து ட்டெண்டிங் செய்யவில்லை!
வேற்று மாநிலத்திற்கும் சென்று, வழக்குகளை வலிமையாக எதிர்கொண்டார்கள்! அடிமைகள் அரசு நடந்த காலத்திலேயே நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு வெளியே வந்தார்கள்!
வீரன் என்று வாழையிலையில் எழுதி நக்கினால் வீரம் வந்துவிடாது! நேராக காலைநீட்டி பாயில் படுத்தால் நேர்மை வந்துவிடாது! அவை பிறவியில் வரவேண்டும்! வளர்ப்பில் பெறவேண்டும்!! – என்ற கருத்துகள் இப்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.


