ப.சிதம்பரம் கைது! சுவர் ஏறிக் குதித்து உள் நுழைந்த சிபிஐ அதிகாரிகள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

cbi arrest pc - 2026

முன்னாள் நிதி அமைச்சரும், உள்துறை அமைச்சருமாக இருந்தவருமான ப.சிதம்பரம் சிபிஐ.,யால் கைது செய்யப் பட்டார்.

தில்லியில் வீட்டிற்கு வந்த ப. சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ. இதை அடுத்து, சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு ப. சிதம்பரம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்!

சிபிஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்தனர். முன்னதாக, ப.சிதம்பரத்தின்  வீட்டிற்கு பின் வழியாக சிபிஐ அதிகாரிகள் நுழைந்தனர்!

முன் வாசல் பூட்டப் பட்ட நிலையில், வாசல் வழியாக சிபிஐ அதிகாரிகள் செல்ல முடியாமல் போனது. இதை அடுத்து ப.சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வீட்டிற்கு பின் வழியாக நுழைந்தனர்

ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் உள்ளே நுழைவதை தடுத்ததால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்றனர்!

முன்னதாக,  இன்று இரவு ப.சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, வீட்டுக்குள் இருந்து சிதம்பரத்தை கைது செய்து, அவரை காரில் ஏற்றிக் கொண்டு, சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.