வரலாற்றில் முதல்முறையாக… உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் கைது!

இந்தியா உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

cbi arrest pc - 2026

ஆடுகின்றானடி தில்லையிலே ….. ஓடுகின்றானடி தில்லியிலே ..
ஆடும் சிதம்பரம் தில்லையிலே ஓடும் சிதம்பரம் தில்லியிலே!

– என்றெல்லாம் செய்யப்பட்ட கேலிகளுக்கு ஒரு முடிவு வந்திருக்கிறது. இன்று இரவு ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு முன்… வரலாற்றில் ஒரு முன்னாள் உள்துறை அமைச்சர் கைது செய்யப் பட்டிருப்பது… முதல்முறை! இன்னும் என்ன வெல்லாம் இருக்கிறது இந்தக் கைது நடவடிக்கையின் பின்னே…!

“Chidambaram’s Himalayan Blender” – சிதம்பரத்தின் “மகத்தானப்பட்ட தவறு”..!

வெட்கத்தை இழந்து ஓடிப் போனதைவிட..

மானத்தை இழந்து ஓடிப் போனதைவிட..

நிச்சயமாக ஜாமீன் கிடைத்து விடும் என்று தலைமறைவானதை விட..

கைது செய்ய சிதம்பரம் தானே வாய்ப்பு தந்திருக்கும் பட்சத்தில்..
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற ஒரு வாய்ப்பாவது கிடைத்திருக்கும்.

இந்த மிகப்பெரிய வாய்ப்புகளை நழுவ விட்டு விட்டார் சிதம்பரம்..!

விதி வலியது..! ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார் என்பதே சிதம்பரத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு..!

இந்த நிலையில் தான்.. சிதம்பரம் காணவில்லை என்று Lookout Notice விடப்பட்டுள்ளது..! இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்..!

ஒரு முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என்று நோட்டீஸ் அனுப்பியது எவ்வளவு பெரிய கேவலம் இந்தியாவை 60 வருடங்களுக்கு மேல் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு..?

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வுக்கு வந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி விட்டார்..!

எனவே, தற்போது சிதம்பரத்தை கைது செய்தால் உச்ச நீதிமன்றத்தில் இனிமேல் ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள் இல்லவே இல்லை..!

தானாகவே வந்து மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார் சிதம்பரம்..!

இப்போது இதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.. சிபிஐ அல்லது அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் சிதம்பரம் தானாக முன்வந்து சரண்டர் ஆவது மட்டுமே அது..!

சிதம்பரம் விதைத்த விஷம் இன்று விருட்சமாக வளர்ந்து நின்று சிதம்பரத்தை பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது..!

– எஸ்.பிரேமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.