அவரவருக்கென்று ஒரு பாணி வேண்டும்! லதாமங்கேஷ்கர்!

இந்தியா சினி நியூஸ் சினிமா

ladha mankeshkar - 2026

என்னுடைய பெயர் அல்லது பாடல்கள் மூலம் யாராவது பயனடைந்தால், அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் மற்றவரின் சாயலை வைத்து மட்டுமே ஒருவரால் ஜெயிக்க முடியாது. எந்த ஒரு செயலாக இருந்தாலும் தனித்துவம் என்பது மிக மிக முக்கியம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கூறினார்.

சில தினங்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கரின் ஏக் பியார் கா நக்மா ஹை பாடலை பாடி பிரபலமானவர் ரநுல் மண்டோல் (Ranu Mondal). மேற்கு வங்காளத்தின் ரணகாட்(Ranaghat) ரயில் நிலையத்தில் இருக்கும் ரநுல் மண்டோல் லதாஜியின் தெய்வீகக் குரலில் ஒரு பாடலை பாடிய ஒரு வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

renu - 2026

ரயில் நிலையத்தில் பாடிய இந்த பாடகி இப்போது பாலிவுட்டின் பின்னணி பாடகி. இவரை ஸ்டுடியோவிற்கு அழைத்து வந்தவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மி. அவருடன் இணைந்தும் ரநுல் மண்டோல் ஒரு பாடல் பாடியுள்ளார். அந்த வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி இன்ஸ்டாகிராம், சமூக வலைதளம் என அனைத்து சமூக வலைதளங்கள் மூலமும் ரநுல் மண்டோல் பிரபலமானார்.

இது குறித்து ஆசியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரிடம் கேட்ட போது ரநுல் மண்டோலுக்காக அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். என்னுடைய பெயர் அல்லது பாடல்கள் மூலம் யாராவது பயனடைந்தால், அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் மற்றவரின் சாயலை வைத்து மட்டுமே ஒருவரால் ஜெயிக்க முடியாது. என்னுடைய பாடல் அல்லது ரஃபி சாப், முகேஷ் பய்யா, ஆஷா போஸ்லே போன்றவர்கள் குரலின் சாயலிலோ பாடினால் அது குறுகிய காலத்திற்கு மட்டுமே வெற்றியை பெறலாம். அது நீடித்து நிலைக்காது.

இன்று தொலைக்காட்சிகளில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் குழந்தைகள், என்னுடைய பாடல் மட்டுமின்றி அனைத்து பாடகர்களின் பாடல்களையும் மிக அழகாக பாடுகிறார்கள் ஆனால் எத்தனை நாட்களுக்கு அவர்கள் நினைவில் இருப்பார்கள். அவர்களுக்கென ஒரு தனிப்பாதையை அமைத்துக் கொள்ளவேண்டும். சுனிதி சவுகான் மற்றும் ஸ்ரேயா கோசல் போன்ற வெகு சிலர் தான் தனக்கென்று தனி வழியை அமைத்துக் கொண்டு எல்லாராலும் அறியப்படுகிறார்கள்.

எங்களுடைய பாடல்களை பாடுங்கள் ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பிறகு அவரவருடைய சொந்த பாடல்களை தேர்வு செய்ய வேண்டும். அதுவே நிலைக்கும். ஒரு உதாரணத்திற்கு என் சகோதரி ஆஷா போஸ்லே அவருடைய தனி திறமையில் பாடவில்லை என்றால் இன்றும் என்னுடைய நிழலில் மட்டுமே இருந்திருப்பார். தனித்திறமை ஒருவரை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பதற்கே ஆஷாவே ஒரு மிக பெரிய எடுத்துக்காட்டு என்றார் லதாஜி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.