matu vandi - 2026

மோட்டார் வாகன சட்டப்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏ/ற்படுத்தியுள்ளது.

விபத்துகளை குறைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு சாலைகளில் அத்திமீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சாலை விதிகளை மீறுவதற்கும் அபராத தொகைகளை அதிகரித்து புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

அதிலிருந்தே பல இடங்களில் அபராதம் அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்பொழுது, மோட்டார் வாகன சட்டப்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூனில் சாலையில் ஓரத்தில் நிற்கவைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டிக்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டள்ளதாம்.

தனது வயலுக்கு ஒட்டியவாரு சாலை ஓரத்தில் தனது மாட்டு வண்டியை நிறுத்தியிருந்த ரியாஸ் என்பவரின் வீட்டை தேடி சென்று காவலர் அபராத ரசீதை வழங்கியுள்ளனர். மாட்டு வண்டிக்கு மோட்டார் வாகன் சட்டத்தின் கீழ் ஏன் அபராதம் என வியந்துள்ளார் ரியாஸ்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அதன்பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து வினவியபோது தவறுதலாக நடந்துவிட்டது என அபராதத்தை கேன்சல் செய்துள்ளது காவல்துறை தரப்பு. இருப்பினும் இந்த சமபவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending