6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 26 வயது இளைஞன் ஷேக் முஷ்டாக்குக்கு மரண தண்டனை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
judgement - 2026

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்றம், ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் 26 வயது இளைஞருக்கு வியாழன் இன்று மரண தண்டனை வழங்கியது.

கட்டாக்கில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஷேக் முஷ்டாக்கிற்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியதாக சிறப்பு அரசு வக்கீல் சௌரி மொஹாபத்ரா தெரிவித்தார்.

நீதிமன்றம் புதன்கிழமை முஷ்டாக்கை இந்திய குற்றவியல் சட்டம் 363, 302, 367 (அ) & (பி) மற்றும் போக்ஸோ சட்டத்தின் 6 பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது, ஆனால் தீர்ப்பை ஒத்திவைத்தது.

ஒடிசாவில் உள்ள போக்ஸோ திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களில் வழங்கப்பட்ட 4வது மரண தண்டனை தீர்ப்பு இது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகளில் இந்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த முஷ்டாக், சாக்லேட் மற்றும் டாஃபிஸ் வாங்கித் தருவதாகக் கூறி, அருகே இருந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்த தொடக்கப் பள்ளியில் வைத்து, அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

ஆனால், அந்தச் சிறுமி அழுதபோது, ​​முஷ்டாக் தனது கைகளால் சிறுமியின் கழுத்தைப் பிடித்து தூக்கி, பள்ளிச் சுவரில் முகத்தை மோதினார். அதனால் அந்தச் சிறுமி மயக்கம் அடைந்ததால், சிறுமி இறந்துவிட்டதாகக் கருதி, சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். ஆனால் அந்தச் சிறுமி கோமா நிலைக்குச் சென்று ஐந்து நாட்களுக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாள்.

இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.