இளைஞன் இளம்பெண்ணிற்கு செய்த வன்கொடுமை! வீடியோ எடுத்த தாய்!

இந்தியா கிரைம் நியூஸ்
satiskar - 2026

சட்டிஸ்கரில் இளம் பெண்ணை காதலிப்பதாக நடித்து ஏமாற்றி வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனும், அதனை வீடியோ எடுத்த தாயும் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வயதான் பெண்ணை இளைஞன் காதலிப்பதாகக்கூறி நடித்துள்ளான். ஒரு நாள் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறான். இளைஞனின் தாயும் அந்த பெண்ணை அன்போடு அரவணைத்து வீட்டிற்குள் கூட்டிச் செல்கிறார்.

பெண்ணை உள்ளே அழைத்து சென்று, உட்கார வைத்து, முதல்முறையா வீட்டுக்கு வந்ததால் இனிப்புத் தருகிறேன் எனக் கூறி மயக்க மருந்து கலந்த இனிப்பைக் கொடுத்துள்ளார்.. இளம்பெண்ணும் மயக்க மருந்து கலந்த அந்த இனிப்பை வாங்கி சாப்பிட, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மயங்கி விழுகிறார் இளம்பெண்.

அதன் பின் அந்த பெண்ணை இளைஞர் வன்புணர்வுக்கு ஆட்படுத்துகிறார். இதனை அந்த இளைஞனின் அம்மா வீடியோ எடுக்கிறார். சிறிது நேரம் கழித்து, மயக்கம் தெளிந்த அந்த இளம் பெண்ணை இளைஞனின் அக்காவும், அக்கா வீட்டுக்காரர் இந்த தாய் ஆகியோர் வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் கேட்கின்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், வெளியில் வீடியோ விஷயம் தெரிந்தால் குடும்ப மானமும், தன் மானமும் போய்விடும் என்று நினைத்து பயந்து வீட்டுக்கு வந்து. அங்கே நிலத்தை விற்ற 4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு போய் அந்த கும்பலிடம் தந்துவிட்டார். மீண்டும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டவே செய்வதறியாத அந்த பெண் தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக காவல்துறையில் இது குறித்து புகார் தந்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தாயையும்-மகனையும் கைது செய்துள்ளனர். மகனின் இழிச்செயலுக்கு ஒரு பெண்ணாக இருக்கிற தாய் உடைந்தையாக இருந்து வீடியோ எடுத்தது அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.