நாய்க்கு பிஸ்கட் போட்டா நன்றி காட்டும்! உங்களால கைகூட தட்ட முடியாதா?

Published:

IMG 20191125 WA0027 - 2026

நாய்க்கு பிஸ்கட் போட்டால் நன்றி காட்டும். உங்களால் கைகூட தட்ட முடியாதா? அமைச்சர் ‘தர்மான கிருஷ்ணதாஸ்’ விமர்சனம்.

‘மெகா ஜாப் மேளா’ தொடக்க விழாவில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேஷ் சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் செய்த விமர்சனத்தால் அங்கு வந்திருந்த இளைஞர்கள் வியப்பால் வாயடைத்துப் போயினர்.

இளைஞர்களை நாய்களோடு ஒப்பிட்டார் என்று எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்தன.

சாலை மற்றும் கட்டிடத் துறை அமைச்சர் தர்மான கிருஷ்ணதாஸ் மீண்டும் ஒருமுறை உளறி கொட்டினார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டை யில் சனிக்கிழமை மெகா ஜாப் மேளா தொடக்க விழாவில் அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் வேலையற்ற இளைஞர்களை உத்தேசித்து பேசிய பேச்சுக்களால் புயல் கிளம்பியது.

” ஒரு பிடி பச்சை புல் போட்டால் மாடு பால் கொடுக்கிறது. நாய்க்கு பிஸ்கட் போட்டால் விசுவாசத்தைக் காட்டுகிறது. செய்த உதவிக்கு மனிதன் நன்றியோடு இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ள செய்தியை தெரிவித்தாலும் யாரும் கை கூட தட்டவில்லை. உங்களுடைய சிந்தனை போக்கு மாறவேண்டும்” என்று அமைச்சர் கிருஷ்ணதாஸ் விமர்சனம் செய்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

“முதல்வர் ஜெகன் இத்தனை நல்ல செயல்கள் செய்தாலும் கை தட்டாமல் அமர்ந்துள்ளீர்கள். ஒரு நியாயமான மனிதனுக்கு என்ன தேவை? உங்கள் கைதட்டல் உற்சாகம் தானே!” என்று வினவினார்.

ஒய்எஸ்ஆர்சிபி பதவிக்கு வந்த உடனே கிராம வாலென்டீர்கள், செயலக பணியிடங்கள் ஏற்படுத்தினார் என்று நினைவு படுத்தினார். இளைய தலைமுறைக்கு டிசிப்ளின் குறைந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். அமைச்சரின் விமர்சனத்தால் அங்கே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரசாங்கத்தின் செயல்முறை பற்றி அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது சபையிலிருந்தவர்களிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைக்காததால் அமைச்சர் அதிருப்தி வெளிப்படுத்தினார்.

ஆனால் தன் விமர்சனத்திற்கு அமைச்சர் விளக்கம் கூட அளித்தார். நாலு லட்சம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய முதல்வர் ஜெகனிடம் இளைஞர்கள் விசுவாசத்தோடு இருக்க வேண்டும் என்றார்.

அந்த உத்தேசத்தில் தான் அவ்வாறு பேசியதாக தெரிவித்தார் .வேறு எந்த கெட்ட நோக்கத்தோடும் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தன் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img