constitution of india - 2026

நவம்பர் 26 – இன்று ‘சம்விதான் திவஸ்’ . இந்திய அரசியல் சாசன தினம். அரசியல் சாசன தினம் எவ்வாறு ஏற்பட்டது? இந்த ஆண்டின் சிறப்பு என்ன?

இந்திய அரசியலமைப்புக்கு 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. 2015இல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 26 அன்று ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்தது.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினம் அல்லது அரசியல் சாசன தினமாக கொண்டாடுகிறோம்.

1949 ல் இதே நாளில் இந்திய அரசியலமைப்புக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. அதன்பின் 1950 ஜனவரி 26 ல் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. நவம்பர் 26 ‘நேஷனல் லா டே’ அல்லது ‘சம்விதான் திவஸ்’ என்று அழைக்கிறோம்.

நேற்று திங்கட்கிழமையோடு அரசியலமைப்பு அமலுக்கு வந்த 70 ஆண்டுகள் முழுமை அடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று நவம்பர் 19, 2015 அன்று இந்திய அரசாங்கம் அறிவித்தது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
nationallawday - 2026

மும்பையில் அம்பேத்கர் சிலைக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2015 ல் அம்பேத்கர் 125வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அம்பேத்கருக்கு அஞ்சலியாக அரசியலமைப்பு நாள் நடத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. அரசியலமைப்பு நாள் அரசு விடுமுறை நாள் கிடையாது. ஆனால் அரசுத் துறைகளில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு முதல் முறையாக ஜம்மு காஷ்மிர் இந்திய அரசியலமைப்பு நாளை கொண்டாடுகிறது.

nationallawday1 - 2026

சம்விதான் திவஸை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகங்களில் காலை 11 மணிக்கு உறுதிமொழி எடுத்துக் கொள்வதோடு அரசியல் சாசனத்தின் முன்னுரையை படிப்பார்கள் என்று ஜம்மு காஷ்மீர் கூடுதல் செயலர் சுபாஷ் சிப்பர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending