தெலங்கானா ஆர் டி சி போராட்டம் முடிவுக்கு வந்தது! ஊழியர்கள் மகிழ்ச்சி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
rtc telangana1 - 2026

தெலங்காணா ஆர்டிசி போராட்டம் உண்மையாகவே முடிந்துவிட்டது. மகிழ்ச்சியாக வேலையில் சேருங்கள் என்றார் மாநில முதல்வர் கேசிஆர்.

ஆர்டிசி தொழிலாளர்களுக்கு தெலங்காணா முதல்வர் சுபச்செய்தி.

ஆர்டிசி தொழிலாளர்கள் தன் பிள்ளைகளே என்றார்.

ஆர்டிசி போராட்டத்திற்கு இன்று முதல்வர் சந்திரசேகரராவ் முடிவுரை எழுதினர்.

மாநிலத்தில் 52 நாட்களாக நீண்ட போராட்டத்தில் பங்கு கொண்டு பணியிலிருந்து விலகி இருந்த 48 ஆயிரம் தொழிலாளர்களுக்கு திரும்ப வேலையில் சேர்வதற்கு வாய்ப்பு வழங்கினார் முதல்வர்.

வெள்ளிக்கிழமை நவ 29 காலையிலிருந்து மகிழ்ச்சியாக வேலைக்கு வரலாம் என்று அறிவித்தார்.

தற்காலிகமாக வேலை செய்து வந்தவர்களுக்கு கூட எதிர்காலத்தில் பணி அளிக்கும் முடிவு எடுப்போம் என்று நம்பிக்கை அளித்தார்.

chandrasekara rao - 2026

இத்தனை நாட்களாக மக்களுக்கு சேவை செய்ததற்காக தாற்காலிக டிரைவர்கள் கண்டக்டர்களுக்கு சிறப்பு நன்றிகளை தெரிவித்தார்.

தெலங்காணா அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பின் வியாழன் மாலை முதல்வர் பிரகதி பவனில் செய்தியாளர்களின் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் எடுத்த முடிவுகளை வெளியிட்டார். ஆர்டிசி தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி கூறினார்.

ஸ்ட்ரைக்கின் போது மரணித்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆதரவளிப்போம் என்று நம்பிக்கை அளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்றார். தகுதியின் படி ஆர்டிசியிலோ அல்லது அரசாங்கத்திலோ பணியில் சேர்த்துக் கொள்வோம் என்று உறுதியளித்தார்.

தொழிலாளர்களின் தற்கொலைக்கு யூனியனே காரணம் என்றார்.

போராட்டத்தின் போது தொழிலாளர்கள் தன்னை இஷ்டம் வந்தாற்போல் தூற்றினார்கள். ஆனால் பொறுப்பான பதவியில் இருக்கும் தான் அதையெல்லாம் பெரிது படுத்தவில்லை என்றார்.

தனக்கு மனிதாபிமானம் அதிகம் இருப்பதாக தெரிவித்தார்.

ஆர்டிசி தொழிலாளர்களும் தன் பிள்ளைகளே என்றும் அவர்களை கண்போல் காப்பேன் என்றும் கூறினார்.

இதையடுத்து இன்று காலை முதல் வேலைக்கு வரத் தொடங்கினர் ஆர் டி சி தொழிலாளர்கள்.

டிப்போக்களின் அருகில் மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க டிரைவர்கள் குவிந்தனர்

இன்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே பஸ் டிப்போக்களின் அருகில் மகிழ்ச்சி சூழல் தொடங்கிவிட்டது.

மீண்டும் எப்போதும் போல் பஸ்கள் சாலைகளில் ஓடத் தொடங்கின.

ஹைதராபாதோடு கூட அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர்கள் உற்சாகமாக வேலைக்குச் சேர்ந்தார்கள்.

முதல்வர் கேசிஆர் எந்த நிபந்தனையும் இன்றி அவர்களை வேலையில் திரும்ப சேர்த்துக் கொண்டதற்கு அவர்களின் முகங்களில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

அதே நேரம் ஸ்ட்ரைக்கின் போது தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு அஞ்சலி செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.