ஜெகன் அதிரடி! ஜூனியர் வக்கீல்களுக்கு ரூ.5 ஆயிரம் மாதம் தோறும் உதவித்தொகை!

Published:

ysr nestham - 2026

‘ஒய்எஸ்ஆர் லா நேஸ்தம்’ (ஒய்எஸ்ஆர் சட்ட நண்பர்) என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஜகன்.

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜகன் மோகன் ரெட்டி செவ்வாய் இன்று ஒய்எஸ்ஆர் லா நேஸ்தம் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இன்று தேசிய வழக்கறிஞர் தினம் தொடர்பாக ஆந்திர அரசு இந்த திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது. அதேபோல் ஒய்எஸ்ஆர் லா நேஸ்தம் என்ற வெப்சைட்டையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெகன்.

இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக சட்டப் படிப்பு முடித்த சட்ட பட்டதாரிகளுக்கு தங்களது சட்டப் பணியில் நிலையாகும் வரை 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 5000 உதவித் தொகை அளிக்க உள்ளார்கள்.

2016 மற்றும் அதன் பிறகு தேர்வில் தேறிய சட்ட பட்டதாரிகளே இந்தத் திட்டத்திற்கு தகுதி உள்ளவர்கள் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img