வேகம் விவேகம் அல்ல..! திருப்புமுனையை உருவாக்குவோம்!

Published:

bike chain snath - 2026

வாகனத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.

அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.

அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு ???? லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு ???? பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் ???? லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது

இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது

ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் செல்கிறார் . இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.

இந்த 4 இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்தைகள், பணம் செலவு, வருவாய் இழப்பு, குடும்ப நிம்மதி இழப்பு மற்றும் பல

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஏதாவது ஒரு இடத்தில் விபத்தில் இறந்துவிட்டார் என வைத்துக் கொள்ளுவோம். அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 20 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது.

5 மற்றும் 20 ஆண்டுகள் வாழ்க்கை தரம் பின்னோக்கி செல்கிறது என்பது ஓர் ஆய்வறிக்கை ஆகும். இறந்தால் காப்பீடு மூலமாக இழப்பீடு கிடைக்கலாம். ஆனால் மனைவிக்கு கணவர் கிடைப்பாரா? பிள்ளைகளுக்கு அப்பா கிடைப்பாரா? பெற்றோருக்கு பிள்ளை கிடைப்பாரா? உடன்பிறப்புக்கு சகோதரன் கிடைப்பாரா?

ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் சென்றோம் என்றால், 12 நிமிடத்தில் 10 கிலோமீட்டர் (50 கிலோமீட்டர் / 60 நிமிடம் * 12 நிமிடம். அதாவது 50/60*12= 10 கிலோமீட்டர்) தூரம் தான்

10 கிலோமீட்டர் தூரம் முந்தி செல்வதில் எதையும் சாதித்துவிடுவது இல்லை அல்லவா?

சில நேரங்களில் நேரம் ஆகிட்டு என்று வேகமாக போகிறோம், அப்படி செல்வதில் 5 நிமிடம் சேமிக்கிறோம் என்றால் 4.15 கிலோமீட்டர் தான் முன்னால் சென்று உள்ளோம்.

அப்படி வேகமாக செல்வதினால் நமக்கு நாமே எமனாகி விடுகிறோம் அல்லது எதிரே வந்தவருக்கோ நாம் எமனாய் மாறிவிடுகிறோம். சிந்திப்பீர் செயல்படுவீர் வேகம் என்பது விவேகம் அல்ல. 5 நிமிடத்தில் ஒன்றுமே சாதித்துவிட போவதில்லை.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

வேகத்தினால் நம் குடும்பத்தினரை அல்லது எதிரே வந்த நபரின் குடும்பத்தினரை கஷ்டப்படுத்தாதீர்கள் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 5 நிமிடம் முன்னதாகவே கிளம்பினால் எவ்வித பிரச்சினையும் இல்லை அல்லவா, ஆதலால் சரியான நேரத்தில் அல்லது 5 முதல் 10 நிமிடம் முன்கூட்டியே கிளம்புவோம்.

நம்மில் இனி மாற்றம் உருவாக்குவோமா? திருப்புமுனையை செயல்படுத்துவோம்

  • பகிர்வு: சூரிய பாண்டியன்

Related articles

Recent articles

spot_img