எச்.ஐ.வி. ரத்த பாதிப்பு பெண்ணுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
Pregnant woman gives complaint in sathur - 2026

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. வீடு கட்டுவதற்கான அரசாணையையும் மதுரையில் நேரில் சந்தித்து வழங்கினார் விருதுநகர் ஆட்சியர் சிவஞானம்.

தமிழக அரசின் நிதியுதவியை பெற வசதியாக புதிதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகமும் அவரிடம் தரப்பட்டது!

இதனிடையே, எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் கூறிய மாங்காடு பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இன்று காலை வந்திருந்தார்.

ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாங்காட்டை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் புகார் தெரிவித்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மற்றும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அவர்கள் காவல்துறை ஆணையரிடம் வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.