ஏப்ரல் 22, 2021, 8:11 மணி வியாழக்கிழமை
More

  பாஸ்தா உண்ட பெண்.. சுருண்டு விழுந்து மரணம்! ஏன் தெரியுமா?

  pastha - 2

  இளம் குடும்பபெண் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பாஸ்தாவை உண்ட பிறகு ஒவ்வாமை காரணமாக மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இத்தாலியின் சிசிலியில் இருக்கும் பலெர்மோவில் வெயிட்டராக பணிபுரிந்து வந்தவர் ரெப்கா ட்ரிடி . 27 வயது மதிக்கத்தக்க இவர், கடந்த வாரம் வியாழக்கிழமை வேலையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், தன்னுடைய வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பாஸ்தாவை சாப்பிட்டுள்ளார்.

  ஆனால், உள்ளே இறால் இருந்ததை அறியாமல் சாப்பிட்டதால், அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவர் உடனடியாக உதவி பெறுவதற்காக அருகில் இருந்தவர்களிடம் கூச்சலிட்டவாறே தேடி ஓடினார். அவர்கள் உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் மருத்துவ குழு வருவதற்குள் ரெப்கா ட்ரிடி சரிந்து விழுந்துள்ளார்.

  இதையடுத்து அவர் உடனடியாக, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் .

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »