அடச்சீ..! இப்படியுமா?பெண் டாக்டர் படுகொலை குறித்து பேஸ்புக்கில் அவதூறு… இளைஞன் கைது!

Published:

Cyber Crime nizamudinboy - 2026

ஹைதராபாத் வெடர்னரி டாக்டர் படுகொலை பற்றி தரக்குறைவாக எழுதி சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த இளைஞன் கைது செய்யப் பட்டான்.

சொற்களால் வர்ணிக்கவோ மனதால் நினைக்கவோ முடியாத கோரம் இது. இப்படிப்பட்ட சொல்லொணாத் துயரம் பற்றி கூட சில தீயவர்கள் கேவலமாக கருத்திட்டு வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக எழுதிய அப்படிப்பட்ட ஓர் இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

உதவியற்ற நிலையில் பயந்து நின்ற ஒரு பெண்ணின் மேல் இரவில் ஓநாய்களாக பாய்ந்து அவரை மூக்கையும் வாயையும் பொத்தி மூச்சு விட முடியாமல் செய்து கொன்ற செய்தி நாட்டையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நினைத்தாலே உடல் நடுங்குகிறது. பெண்களையும் பெற்றவர்களையும் குலை நடுங்கச் செய்கிறது.

ஆனால் அத்தகைய கொடுமை குறித்துக் கூட சில கயவர்கள் தரக்குறைவான தவறான கருத்துகளை வெளியிடுகிறார்கள். நிஜாமாபாதில் அப்படிப்பட்ட இளைஞனை காவல்துறை பிடித்துள்ளது.

hyderabad police annoucement - 2026

திசா சம்பவம் பற்றி அசிங்கமாக தரக்குறைவாக காமெண்ட்ஸ் எழுதிய நிஜாமாபாதைச் சேர்ந்த இளைஞனை ஹைதராபாத் சிபிஎஸ் போலீசார் செவ்வாயன்று கைது செய்தனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

நவீபேட் மண்டலம் பிகீராபாதைச் சேர்ந்த சவான் ஶ்ரீராம் (22) என்ற ஸ்டாலின் ஸ்ரீராம் பேஸ்புக்கில் தரக்குறைவான போஸ்ட் போட்டதை போலீசார் கண்டறிந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிராக நவம்பர் 30-ஆம் தேதி இது போன்ற போஸ்ட்களை சிலர் ஷேர் செய்து வந்தது போலீசார் கவனத்திற்கு வந்தது. மேலும் இதுபோன்ற சிலரை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img