அருப்புக்கோட்டை அருகே தந்தை மற்றும் மகனை காரில் கடத்தி
ரூ 20,000 பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது. திருச்சுழி காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த மைக்கேல் (42). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த மீரா (55) என்பவரிடம் திருச்சுழி அருகே குருந்தங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மைக்கேல் மற்றும் அவரது தந்தை ஆரோக்கியசாமி ஆகிய இருவரும் காரில் வந்து தாங்கள் வாங்கிய நிலத்தின் அருகில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் அவருடன் பேசி தகராறு செய்து அரிவாளால் மைக்கேல் என்பவரை தாக்கி விட்டு அவரையும் அவருடைய ஆரோக்கிய சாமியையும், மைக்கேல் காரிலேயே கடத்தி சென்றுள்ளனர்.
அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் தந்தை மற்றும் மகனை விட்டு விட்டு அவர்களிடம் இருந்த ரூ 20,000 பணத்தை அந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்
இது குறித்து காயம் அடைந்த மைக்கல் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகாரியின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செம்பொன் நெருஞ்சி கிராமத்தைச் சார்ந்த லெட்சுமணன் (25) வீரசூரன் (27), விமல் (20)
லெட்சுமணன் (17) ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்





