உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி திமுக., மனு!

Published:

election comission - 2026

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்தப் புதிய மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக நாளை விசாரிக்க உள்ளது. மேலும், 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் சார்பில் தொடர்ந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது !

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img