நாட்டின் நலனில் அக்கறையுடன் செயல்பட டிவி சேனல்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
tv - 2026

தொலைக்காட்சிதான் மக்களின் பிரதான பொழுதுபோக்கு இருந்து வருகிறது.. டிவியில் அனேக சேனல்கள் வந்துவிட்டன.

தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகள் மக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைகிறது.

ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பபடும் சில நிகழ்ச்சிகளால் மக்கள் மனசில் வன்முறை தூண்டும் அளவிற்கு உள்ளது.

குறிப்பாக பெண்கள், குழந்தைகளைப் பாதிக்கும் விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால், பல்வேறு அசம்பாவிதங்கள், பெரும் போராட்டங்களாக வெடிக்கின்றன.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; டிவி சேனல்கள் நாட்டின் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

வன்முறையை தூண்டும் விதமாகவோ, நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் விதத்திலான செய்திகளையோ விளம்பரங்களையோ ஒளிபரப்பு செய்ய ஒழுங்குமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதனை சேனல்கள் தவறாமல் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.