ப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்!

Published:

harish 3 - 2026

நடிகர் ஹரிஷ் கல்யாண் காதல் கதைக்களம் கொண்ட படத்திற்கே முக்கியத்துவம் அளித்து நடித்து வருகிறார்.

அண்மையில் கூட தனுசு ராசி நேயர்களே என்ற படம் இவர் நடித்து வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய புது படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தில் கதநாயகியாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் கமிட்டாகியுள்ளார். இதுவே இவர்கள் இணையும் முதல் படமாகும். மேலும், நடிகர் விஜய் தேவரக்கொண்ட நடித்து தெலுங்கில் வெளிவந்த பெல்லி சூப்புலு என்ற படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

harish 1 - 2026

இயக்குனர் ஏ.எல்.விஜய் உதவியாளர் கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி., ஹவிஸ் புரொடக்‌ஷன்ஸ் கொன்ரு சத்யநாராயணா இணைந்து தயாரிக்கின்றனர்.

harish 2 - 2026

ஒளிப்பதிவு, கிருஷ்ணன் வசந்த். இசை, விஷால் சந்திரசேகர். வசனம், தீபக் சுந்தர்ராஜன். பிரம்மச்சாரியாக இருக்கும் பொறியியல் பட்டதாரி ஹரீஷ் கல்யாண், திடீரென்று திருமண விளையாட்டில் தள்ளப்பட்டு, தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img