‘கனிமொழி மீது வழக்கு? : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

Published:

pandiarajan mafoi
pandiarajan mafoi

‘சாத்­தான்­கு­ளம் விவ­காரத்தில், கனி­மொழி மீது, நீதி­மன்ற அவ­மதிப்பு வழக்கு தொடர வாய்ப்­புள்­ளது,’’ என, அமைச்­சர் பாண்­டிய­ராஜன் கூறினார்.

சென்னை, வியா­சர்­பா­டியில், கொரோனா தடுப்புப் பணி­யில் ஈடு­பட்டுள்ள களப்­ப­ணி­யா­ளர்­களுடன் கலந்­துரையாடினார் அமைச்சர் பண்டியராஜன். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது,  ‘தமிழ­கத்தில், கொரோனா வைரஸ் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை, ஒரு லட்­சத்தை கடந்து விட்­டது’ எனக் ­கூறும் எதிர்க்­ கட்சித் தலை­வர் ஸ்டா­லின், குணம­டைந்­தோர் எண்­ணிக்­கையை மறைத்து, மக்­கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்­ப­டுத்துகி­றார். 

தொற்று உள்­ள­வர்­கள் எண்­ணிக்கை, 42,955 மட்டுமே. தமிழ­கத்தில், 2,000 பேருக்கு ஒரு­வர் என்ற விகி­தத்தி­லேயே, தொற்று பாதிப்பு உள்­ளது. இந்த பேரிடர் காலத்தில், தமிழக அரசு, இயன்ற அள­வையும் மீறி செலவு செய்து வருகிறது. அர­சில் நிதி போதுமா­ன­தாக இல்லை எனக் குறை கூறும் ஸ்டா­லின், தன் கட்சி நிதியிலிருந்து உத­வ­லாம். 

சாத்­தான்­கு­ளம் சம்­ப­வத்தில், உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளுக்கு தகுந்த தண்­டனை வழங்க, அரசு உறுதியுடன் உள்­ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள்  கொலை வழக்கு பதிவு செய்­யப்­பட்டு கைது செய்­யப்­பட்டுள்­ள­னர். 

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

இந்த விவ­கா­ரத்தில், ஆதா­ர­மற்ற குற்­றச்சாட்டு­களை, தமிழக அரசு மீது, கனி­மொழி சுமத்தி வருகி­றார். குற்­ற­வா­ளி­களை தப்ப வைக்க, தமிழக அரசு முயற்சிப்­ப­தா­க­வும், அவர் குற்­றம் சாட்டியுள்­ளார். 

உயர் நீதிமன்­றம் கூட, தமிழக அரசு இந்த விவ­கா­ரத்தில் சிறப்­பான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக பாராட்டியுள்­ளது. இந்நி­லை­யில், தமிழக அர­சின் மீது, கனி­மொழி கூறிய குற்­ற­சாட்டு­கள், நீதிமன்ற அவ­மதிப்பு ஆகும். எனவே, அவர் மீது சட்­ட­பூர்­வ­மான நடவ­டிக்கை எடுக்க வாய்ப்­புள்­ளது.” என்றார் பாண்டியராஜன்.

Related articles

Recent articles

spot_img