இந்து கடவுளை அவமதித்த சல்மான் கான்? வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Published:

salman1 1 - 2026

சல்மான் கானின் தபங் 3 படம் நேற்று வெளியானது. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போராட்டத்துக்கு தூண்டிவிடுவதால் தபங் படத்தின் முதல் நாள் வசூல் பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு புதிய சிக்கலாக, இந்து கடவுளை சல்மான் கான் அவமதித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

SALMAN HATES HINDU என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள தபங் 3 படம் நேற்று வெளியானது.தபங் 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட பக்கா கமர்ஷியலாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சல்மான் கானின் தபங் 3 படம் நேற்று வெளியான நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் படத்தின் வசூலை வெகுவாக பாதித்துள்ளது. முதல் நாளில் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 22 கோடி அளவு வசூல் இருக்குமாம்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

வட இந்தியாவில் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தூண்டி விடப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு குழுக்கள் இஸ்லாமிய நடிகரான சல்மான் கான் தங்களுக்காக ஏன் குரல் கொடுக்க வில்லை என்று ஷேம் ஆன் பாலிவுட் மற்றும் பாய்காட் பாலிவுட் ஹாஷ்டேக்குகளில் திட்டித் தீர்த்தனர்.

IMG 20191221 WA0028 - 2026

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவலிங்க சிலை ஒன்றை சல்மான் கான் அவமதித்துள்ளார் என பாலிவுட் ரசிகர்கள் SALMAN HATES HINDU ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சல்மான் கான் பாகிஸ்தானி என்றும், அவர் இந்து கடவுள்களை மதிக்க மாட்டார் என்றும் ட்வீட் போட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img