சிஏஏ அச்சத்தால்… கும்பல் கும்பலாக நாடு திரும்பும் மக்கள்! 350 பேரை கைது செய்த வங்கதேசம்!

Published:

Bangladeshi illegal - 2026

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாக்கத்தைத் தொடர்ந்து (CAA க்குப் பிறகு) சட்டவிரோத பங்களாதேஷியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பங்களாதேஷுக்குச் செல்கின்றனர்! அவ்வாறு வங்கதேசம் சென்ற 350 பேர் எல்லையில் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அமலாக்கத்தைத் தொடர்ந்து (சிஏஏ) பின்னர், இந்தியாவில் வசிக்கும் சட்டவிரோத வங்கதேசத்தவர்கள் இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்த அச்சத்தால் வங்கதேசத்துக்குத் திரும்புகின்றனர். மக்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பங்களாதேஷுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அண்மையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 350 க்கும் மேற்பட்டோர் வங்கதேசத்துக்குள் நுழைய முயன்றபோது வங்கதேச எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், அச்சத்தின் காரணமாக எல்லைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்களாதேஷுக்குள் நுழைகிறார்கள்… என்றனர்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) அதிகாரிகளின் கூற்றுப்படி, தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது வாழ்வாதாரத்திற்காக இந்தியாவுக்குச் சென்றதாகக் கூறினர்! ஆனால் சரியான ஆவணங்களை அவர்கள் வழங்கத் தவறிவிட்டனர்.

வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) மேஜர் கமருல் இஸ்லாம் கூறுகையில், “நாங்கள் எல்லையில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சட்டவிரோதமாக யாரும் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்தியா-பங்களாதேஷுக்கு இடையிலான பல எல்லைப் பகுதிகள் திறந்திருக்கும் நிலையில், மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக வருகிறார்கள், இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img