‘ஜியோ மார்ட்’ நேரடி விற்பனை மற்றும் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ் தொடக்கம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
Jio mart - 2026

வால்மார்ட், அமேசான், பிக் பேஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருள்கள் கிடைக்கும் வகையிலான சூப்பர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்களை துவக்க உள்ளது.

“நாட்டின் புதிய கடை’ என்ற அடைமொழியுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஜியோ மார்ட், தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் கல்யான் பகுதியில் மட்டுமே செயல்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக நாடு முழுவதும் சேவை வழங்கிடும் வகையில் இது விரிவுபடுத்தப்படும்.

தற்போது 50,000க்கும் அதிகமான மளிகை சாமான்கள் கிடைக்கும் எனவும், டெலிவரி இலவசம் என்றும் ஆர்டர்களுக்கான குறைந்தபட்ச தொகை எதுவும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேள்வியே இல்லாமல் பொருட்கள் திரும்பப் பெறப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.