பாகிஸ்தானில் தயாரான 14 குண்டுகள் கேரளத்தில் கண்டெடுப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
kulathoopuzha bullets - 2026

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழவில் பாகிஸ்தானில் தயாரான குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் தமிழக எல்லையை ஒட்டிய தென்மலை, குளத்துப்புழா அருகே ஒருபாலத்தின் அருகில் பாகிஸ்தானில் தயாரான POF என்று குறிக்கப்பட்ட உயிரோட்டமுள்ள 14 துப்பாக்கி குண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்..! இவை அதிக தொலைவு குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடியவை என்பதும், அவற்றில் பிஓஎஃப் என்று குறிக்கப்பட்டிருப்பதும் போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிஓஎஃப் என்பது பாகிஸ்தான் ஆர்டனன்ஸ் ஃபேக்டரி என்பதும், இவை அனைத்தும் பாகிஸ்தானில் தயாராகி இங்கே கொண்டு வரப்பட்டவை என்பதும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சனிக்கிழமை இரவு இதனை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த குண்டுகள் வந்தது எப்படி என்று போலீஸார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாநில காவல் துறைத் தலைவர் லோகநாத் பெஹரா கூறிய போது, இந்த விவகாரம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்துவர். அந்தப் பகுதியில் பைக்கில் சென்ற இருவர் பாலத்தின் அருகே சாலை ஓரத்தில் ஒரு மூடிய கவரில் இதனைக் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த குண்டுகள் தொலை நோக்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய 7.62 மிமி குண்டுகள் என்றார்.

CAA வுக்கு எதிரான போராட்டங்களை இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொண்டு வரும் நிலையில், வெடிகுண்டுகள் கண்டெடுக்கப் பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்களை கேரள முதல்வர் பிணராயி விஜயன் கண்டித்துப் பேசியுள்ளார்.

குமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனைச்சாவடியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் கேரளத்தில் இருந்து தொடர்பில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் தொடர்பில் உள்ள இந்திய இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் துப்பாக்கிகள் குண்டுகளுடன் கடத்தலில் ஈடுபடுவதும், அவற்றைக் கொண்டு, தற்போதைய போராட்ட சூழ்நிலையை பயன்படுத்தி எத்தகைய நிலைக்கும் சென்று விடுவார்கள் என்பதையும் குறிப்பிட்டு தங்களது அச்சத்தை தெரிவிக்கின்றனர் பலர்.

போராட்ட சூழலைப் பயன்படுத்தி ஏதேனும் அசம்பாவிதத்தை இந்த அடிப்படைவாதிகள் நிகழ்த்தி, பழியை அரசின் மீதும் காவல்துறையின் மீதும் போடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதால், தாய்நாடு மீதான ஏதேனும் ஒரு உணர்வு இருந்தால், தாங்கள் மாறிக் கொள்ள கடைசி வாய்ப்பு நடுநிலை வாதிகளுக்கு என்று கருத்து தெரிவிக்கின்றனர் சமூகத் தளங்களில்!

கேரளம் அடுத்த ஒரு காஷ்மீராக மாறிக் கொண்டு வருகிறது என்பதும், தமிழகத்துக்குள் ஏற்கெனவே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களது வேலைகளைச் செய்து வருவதால், இஸ்லாமிய சமூகம் மிக கவனமாக இருக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர் பலர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.