வைரஸ் பாதிப்பில்… 30 ஆயிரம் கோழிகள் மரணம்!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
hen - 2026

வைரஸ் பாதித்து 30 ஆயிரத்துக்கும் மேல் பண்ணைக் கோழிகள் இறந்து போன சம்பவம் கம்மம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

கம்மம் மாவட்டம் பெனுபல்லி மண்டலம் நாயகுல கூடெம் கிராம எல்லையில் உள்ள கோழிப் பண்ணையில் அண்மையில் மிகப்பெருமளவில் இறந்து போன கோழிகளை தூக்கி எறிந்துள்ளதை கண்டித்து பெனுபல்லி தாசில்தாருக்கு நாயகுல கூடம் கிராமப் பெரியவர்கள் புகார் செய்தார்கள்.

கிராமப் பெரியவர்களின் புகாரின்பேரில் இறந்த கோழிகளை வீசி எறிந்த இடத்திற்கு பெனுபல்லி மண்டலம் வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், போலீசார் சென்றடைந்து விசாரணை நடத்தினர். சுமார் 30 ஆயிரத்துக்கும் மேலாக கோழிகளை கோழிப் பண்ணைக்கு வெளியே வீசி எறிந்து இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தார்கள்.

எந்த காரணத்தினால் கோழிகள் இறந்தன என்ற விஷயத்தின் மீது பரிசீலித்து வருவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அலட்சியத்தின் காரணமாக இறந்த கோழிகளை பண்ணைக்கு வெளியே தூக்கி எறிந்த கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் மீது கடினமான நடவடிக்கை எடுக்க எடுத்துக்கொள்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

hens - 2026

இதுவரை பலவிதமான தொற்று நோய்கள் பரவி வரும் நேரத்தில் மனிதர்கள் நோய்வாய்ப்பட்டுவரும் நிலையில் இவ்விதமாக மிகப் பெருமளவில் கோழிகள் இறப்பதும் அவற்றை தூக்கி எறிவதும் கண்டு அண்டை கிராம மக்கள் பயத்திற்கும் கவலைக்கும் ஆளாகி உள்ளார்கள். கோழி உற்பத்திக்கு பெயர்போன தெலங்காணா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் விந்தையான வைரசால் 30 ஆயிரத்துக்கும் மேல் கோழிகள் மரணம். கவனமாக இருங்கள்… என்று அதிகார்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

இதுவரையில் கரோனா வைரசால் உலகெங்கும் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா முழுவதும் மக்கள் சிக்கன் சாப்பிடுவதை பெருமளவில் நிறுத்தி உள்ளார்கள். இதனால் சிக்கன் வியாபாரம் படுத்துப் போனது. ஆனால் சிக்கன் வியாபாரத்தின் மீது புதிய வைரஸ் அட்டாக் செய்துள்ளது. இவ்வித வைரஸினால் 30 ஆயிரத்துக்கும் மேல் கோழிகள் இறந்து போயுள்ளன. கம்மம் மாவட்ட கோழிப் பண்ணை விவசாயிகள் இது குறித்து தீவிர கவலை தெரிவித்துள்ளனர்.

நாளுக்குநாள் கோழிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஆனால் அந்த வைரஸ் என்ன என்பது புரியவில்லை என்று பண்ணை நிர்வாகிகள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து கோழி பண்ணையை நடத்தி வருகிறோம். நஷ்டம் மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது என்று வருந்துகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றி தாசில்தார் ரவிகூர் கூறுகையில் அண்மைகாலமாக கோழிகளுக்கு வினோதமான வைரஸ் பரவி வருகிறது என்றும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தாலும் அந்த வைரஸ் என்ன என்பதை கண்டறிய முடியாமல் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அண்மையில் 30 ஆயிரத்துக்கும் மேல் கோழிகள் இறந்துள்ளன. ஆனால் அவ்வாறு இறந்த கோழிகளை கிராமத்தின் பக்கத்தில் உள்ள குளத்தில் குழிவெட்டி அதில் தூக்கி எறிந்து உள்ளார்கள். அவற்றின்மீது மண்ணைப் போட்டு மூடாததால் நாய்கள் அவற்றை குதறித் தின்று வருகின்றன. அதன் காரணமாக ஒரே துர்நாற்றம் வீசுகிறது என்று அண்டை கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் .

அண்மையில் சீனாவில் கூட வைரஸ் தாக்குதலால் கோழிகள் மரணித்தன. அதேபோல் இங்குகூட நடக்குமோ என்னவோ என்று அவர்கள் ஐயத்தினால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.