கிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா? குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு!

Published:

hindu aikya vedi protest - 2026
pic: Janam tv

கிருஷ்ணரை தனது கவிதையில் அவமதிக்கும் கவிஞருக்கு விருது அறிவித்ததற்காக குருவாயூர் தேவஸ்வம் வாரியத்திற்கு எதிராக இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கவிஞர் பிரபா வர்மாவுக்கு ஞானபானா விருதை வழங்க முடிவு செய்துள்ள குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து ஐக்ய வேதி அமைப்பு ஊர்வலம் நடத்தியது. பொதுவான பக்தர்களின் நம்பிக்கைகளை சிதறடிப்பதன் மூலம் கிருஷ்ணரை மோசமாக சித்தரித்த கவிஞருக்கு மதிப்புமிக்க ஞானபானா விருது வழங்கப்படுவதற்குத்தான் இந்த எதிர்ப்பு!

குருவாயூர் தேவஸ்வம் போர்ட் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து ஐக்ய வேதி போராட்டத்தை நடத்தியது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் செய்த சேவைகளுக்காக பிரபா வர்மாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக ஐக்கிய வேதி கூறியுள்ளது. தேவஸ்வம் தலைவர் பதவி விலக வேண்டும் என்று இதற்காக அந்த அமைப்பு கொடி பிடித்துள்ளது.

பிரபா வர்மாவின் கவிதையில் பகவத்கீதையை வழங்கியதற்காக பகவான் கிருஷ்ணர் வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாண்டவர்களின் மனைவியான பஞ்சாலி மீது கிருஷ்ணருக்கு ரகசிய ஏக்கம் இருந்தது என்று அவர் எழுதுகிறார். அவரது கவிதை முழுதும் அபத்தம் என்கிறார்கள். சியாமளா மாதவனான பகவானை ’ஷ்யாமா மாதவ்’ என்ற கவிதையில் இத்தகைய அறுவெறுப்பான கருத்துகளால் நிறைத்திருக்கிறார் இந்தக் கவிஞர்.

பிரபா வர்மாவுக்கு விருது வழங்குவதற்கான முடிவை எதிர்த்து தபஸ்ய கலா வேதியும் வெளியில் வந்துள்ளார். இதுபோன்ற ஒரு கவிதைக்கு விருது வழங்குவது கிருஷ்ணரை புகழ்ந்து பேசும் ஞானபானா எழுதிய கிருஷ்ண பக்தரான பூந்தானத்தை அவமதிப்பதாகும் என்று அந்த அமைப்பு கூறியது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இருப்பினும், ஷ்யாமா மாதவ் என்ற கவிதை இறைவன் மீது பக்தி நிறைந்ததாக குருவாயூர் தேவஸ்வம் போர்டு கூறி வருகிறது. இதன் மூலம் குருவாயூர் தேவஸ்வம் போர்டு பெரும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img