வைத்தியம் பார்த்த நர்ஸ்க்கு கொரோனா! தனிமைப்படுத்தப் பட்ட தாயும், மகளும்..!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
coronovirus - 2026

கேரளாவைச் சேர்ந்த பலர் இத்தாலி உள்பட பல்வேறு வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். கடந்த மாதம் 29-ந்தேதி இத்தாலியில் இருந்து கேரளா வந்த தம்பதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தம்பதியுடன் தொடர்பில் இருந்த அவரது பெற்றோர், உறவினர்கள் என 11 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் 11 பேரும் பத்தனம்திட்டா, கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இத்தாலி தம்பதிக்கு பத்தனம்திட்டா ஆஸ்பத்திரியில் முதன் முதலில் சிகிச்சை அளித்த நர்சு ஒருவருக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறியும் காணப்பட்டது.

இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் நர்சையும் அவரது மகளையும் உடனடியாக தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இருவரின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.