
ஜம்மு:
வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் மரணம் அடைந்தார்.
காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் காத்ரா என்ற இடத்தில் உள்ளது மாதா வைஷ்ணவி தேவியின் குகைக்கோவில். இங்கே வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த பெண் சந்திரா (61) என்பவர் தமது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். நேற்று அனைவரும் தரிசனத்தை முடித்து வெளியே வந்தபோது திடீரென சந்திரா மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



