கொரோனா: இன்றைய பாதிப்பு: 121; சென்னையில் மட்டும் 103… உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

Published:

coronavirus 1
coronavirus 1

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இந்தியாவில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் : 29,974, குணமடைந்தவர்கள் : 7,027
உயிரிழந்தவர்கள் : 937 பேர்.

இந்நிலையில் இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில்…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாத்திதவர்களின் மொத்த எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

corona in tn apr 28
corona in tn apr 28

தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்துள்ளனர். இதை அடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை அறிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள பகுதியாக, தொடர்ந்து சென்னை இருந்து வருகிறது. சென்னையில் மொத்தம் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், சென்னை -103, செங்கல்பட்டு- 12 பேர், கள்ளக்குறிச்சி- 3 பேர், நாமக்கல்- 2 பேர், காஞ்சிபுரம்-1 என 5 மாவட்டங்களில் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்
corona in tn
corona in tn

தமிழகத்தில் மொத்தம் 2,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர்களில் ஆண்கள்- 1,392 பேரும் பெண்கள் 666 பேரும் அடங்குவர். இன்று ஒரே நாளில் 7,093 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. வீட்டுக் கண்காணிப்பில் 30,692 பேரும், அரசு கண்காணிப்பில் 47 பேரும் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்கள் ஆகியுள்ளபெண் குழந்தைக்கும் 1 வயதான இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் 68 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img