lovers 1

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடும்பத் தகராறில் கணவனைக் கொலை செய்த மனைவி, மாமியார் மற்றும் மாமியாரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அடுத்த பஞ்சாப் லைன்ஸ் பகுதியில் வசித்து வந்த சுர்ஜீத், ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு ரிஷிகா என்ற மனைவி மற்றும் 4 வயது மகன் உள்ளனர்.

இந்நிலையில் சுர்ஜீத்தின் மாமியார் ரமாதேவிக்கும் அதேபகுதியைச் சேர்ந்த தேவேந்திரா என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சுர்ஜித்தின் மனைவி ரிஷிகாவுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மாமியார் கள்ளக்காதலை நிறுத்த வேண்டும் என தனது மனைவியை சுர்ஜித் கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

adipathu
adipathu

இந்த பிரச்சனை நீடிக்கவே சுர்ஜித்தை தீத்துக் கட்ட மனைவி, மாமியார், கள்ளக் காதலன் சேர்ந்து முடிவெடுத்து திட்டம் தீட்டினர். இதற்காக கடந்த திங்கட்கிழமையன்று வீட்டிற்கு சாப்பிட வருமாறு சுர்ஜித்தை அழைத்துள்ளார் மாமியார் ரமாதேவி. அவர் அங்கு வந்தவுடன் அவரை இரும்பு கம்பியால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.

பின்னர் உடலை ஒரு பாழடைந்த வீட்டில் வீசிவிட்டு வந்துவிட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சுர்ஜித்தின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

போலீஸ் தீவிர விசாரணையில் அவரை கொலை செய்தது மனைவி ரிஷிகா, மாமியார் ரமாதேவி, மாமியாரின் கள்ளக்காதலன் தேவேந்திரா என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending