இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1,45,380 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 146 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6,000ஐ கடந்துள்ளது.
இந்நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் இதுவரை 60,490 பேர் குணமடைந்துள்ளனர், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,167 ஆக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 80,722ஆக அதிகரித்துள்ளது. அதே போல கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 42.6% ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே மோசமான பாதிப்புக்கு ஆளான மாநிலமான மகாராஷ்டிராவில் நேற்று 2,436 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 805, குஜராத்தில் 405 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றால் உலக நாடுகளில் இதுவரை 55.90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3.47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 23.66 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.