இன்னும் இரு நாளில் தொடங்குது… தென்மேற்குப் பருவமழை !

இந்தியா சற்றுமுன்
07 July23 Kerala
07 July23 Kerala

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் என கூறியிருந்த நிலையில் இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, நாளை மறுநாள் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், கேரளா உள்ளிட்ட தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

எனவே, மத்திய கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.