தேசத்தை உலுக்கிய கண்ணீர் சம்பவம்: கர்ப்பிணி யானையின் குரூர மரணம்!

Published:

elephant
elephant

கேரளத்தில் இரு தினங்களுக்கு முன்னர், பசியால் தவித்த கர்ப்பிணி யானைக்கு ‘மர்ம நபர்கள்’ அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்துக் கொடுத்ததில், அந்த யானையின் வாய், தொண்டைப் பகுதிகள் கிழிந்து, காயம் பட்டு, அந்த எரிச்சலைத் தணிக்க நீருக்குள் யானை அமிழ்ந்து இருந்து, பின்னர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இது தேசிய அளவில் எதிரொலித்தது. மனிதத் தன்மையற்ற இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைச் செய்தவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. சமூகத் தளங்களிலும் இந்த முழக்கம் பெரும் அளவில் எதிரொலித்தது!

elephant
elephant

இது குறித்த சில பகிர்வுகள்:

கேரள மலப்புரத்தில் மனசாட்சி என்பதை அறுத்து கூறுபோட்டது போல யானைக்கு அன்னாசியில் வெடியை வைத்து கொடுத்திருக்கிறார்கள். யானையின் வாய், தொண்டை பகுதிகள் கிழிந்து காயமாகிவிட்டது.அந்த எரிச்சலை தாங்க முடியாமல் குளத்தில் இறங்கி நின்று மரணித்துவிட்டது.?

யானையின் வயது 15,கூடவே அது கர்ப்பமாக இருந்தது என தெரிய வந்துள்ளது.இஸ்லாமிய படையெடுப்பாளர்கள்தான் இந்திய யானைகளின் மேல் தீராத வெறுப்பை வைத்திருந்தார்கள்.இன்னும் அது மாறவில்லையா?

சரஸ்வதி மகாலில் ஒரு புகழ்பெற்ற பாலகாப்பியர் இயற்றிய ‘கஜசாஸ்த்திர’ நூல் உள்ளது.அதில் யானையின் கர்ப்ப காலத்தை குறிப்பிடும் இடத்தில் எப்போதும் நீரில் முழுக விருப்பம் கொள்வது ‘கஜ கர்பிணி லக்ஷணம்’ என்ற ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
elephant sand art
elephant sand art

ஒருவேளை அதனுடைய கர்ப்ப விருப்புதான் நீரில் இறங்க வைத்ததா அதை என்று தெரியவில்லை.நினைக்கவே வேதனையாக உள்ளது.சூலுற்ற யானை சாபம் கொடுப்பது போல நீரில் இறங்கி இறந்து போயிருக்கிறது.

மன்னர் சரபோஜியை பற்றி ஒரு குறிப்புண்டு.பொதுவாகவே அரசர்கள் தங்கள் பட்டத்து யானை உண்ட பிறகுதான் தாங்கள் உணவு உண்பார்கள் என்கிற ஒன்றையும் சொல்கிறார்கள்.அதையே அவரும் கடைபிடித்துள்ளார்.இதிலெல்லாம் ஏதோ ஒரு மறைமுக கயிறுகள் நாமறியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.

எனவே மலப்புரத்தில் நடந்தது நல்ல அறிகுறி இல்லை.இதை செய்தவன்,ரசித்தவன்,வேடிக்கை பார்த்தவன் என அழியப்போவது உறுதி.

elephant killed
elephant killed

கேரளா பாலக்காடு வனப் பகுதியில் உணவு தேடி வந்த யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி மருந்தை வைத்துக் கொடுக்க, வாயில் வெடித்து, உணவெடுக்க முடியாமல், உயிர் விட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகின்றது. அந்த யானை தாய்மையடைந்யிருந்தது பெரும் துயரம்.
– அர்ஜுன் சரவணன் (நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர்)

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img