தையல்காரர், முடிதிருத்துபவர், சலவைத் தொழிலாளர்க்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்! முதல்வர் அதிரடி!

Published:

jegan mohan reddy

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து , ஏழை எளியோர், மாணவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில் தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தையல்காரர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கால் அவர்கள் பாதிக்கப்பட்டதை உணர்ந்து 2.47 லட்சம் பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.247 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் சுமார் 3.5 கோடி பயனாளிகளுக்கு ரூ.42,465 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஆந்திராவில் இவ்வளவு பெரிய தொகை ஒரு போதும் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எந்தவொரு நலத்திட்டத்திலும் விடுபட்ட பயனாளிகள் அது குறித்து ஊராட்சி மற்றும் வார்டு அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img