ஐ.பி.எல் தொடக்க விழா: கோலி – அனுஷ்கா ஜோடி ரெடி !

kohli-anushka கொல்கத்தா: ஐ.பி.எல். சீஸன் 8 போட்டித் தொடர் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. மே மாதம் 24 ஆம் தேதி வரை 47 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் ஆட்டங்கள், சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்பட 12 மைதானங்களில் நடக்கிறது. இதில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் தொடக்க ஆட்டமே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழா பிரமிப்பூட்டும் வகையில் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி நடிகையும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் காதலியுமான அனுஷ்கா சர்மா, இந்திப்பட நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், சாகித் கபூர், பர்ஹான் அக்தர் ஆகியோரின் நடனத்துடன் இசை அமைப்பாளர் பிரீத்தமும் இந்த நிகழ்ச்சியில் கலக்கக் காத்திருக்கிறார். நடிகர் சயீப் அலி கான் தொடக்க விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், தொடக்க விழாவுக்காக இன்று கொல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் ஜோடியாக வந்திறங்கினர்.