ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி சுட்டு கொலை! சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் மரணம்!

இந்தியா சற்றுமுன்
miltry 1

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று நள்ளிரவு தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதியின் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாதி ஒருவரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

ஸ்ரீநகரின் மால்பாக் பகுதியில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதி அருகே 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு போலிஸீார், சிஆர்பிஎஃப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, திடீரென அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதற்கு போலீஸார் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற 2 தீவிரவாதிகளும் தப்பிவிட்டனர். அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும், 92-பேஸ் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிஆர்பிஎஃப் காவலர் குல்தீப் உராவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தேடுதல் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ‘ஸ்ரீநகரின் மால்பாக் பகுதியில் நேற்று இரவு போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிஆர்பிஎஃப் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. முழுமையான விவரங்களை விரைவில் வழங்குகிறோம்’ என்று தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் கடந்த வாரத்தில் இருந்து நடக்கும் 4-வது என்கவுன்ட்டர் இதுவாகும். இதுவரை கடந்த வாரத்திலிருந்து 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.