மூன்று ஆசிரியர்கள் ஒரு மாணவி.. கடத்தி சென்று மலை உச்சியில் பாலியல் வன்கொடுமை! ஆசிரியர்கள் பணி இடை நீக்கம்!

இந்தியா கிரைம் நியூஸ்
vankodumai

ஒரு பெண்கள் படிக்கும் பள்ளியின் மூன்று ஆசிரியர்களே ,ஒரு பெண்ணை கடத்தி கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரிடையே அதிர்ச்சி அலை எழுந்துள்ளது.

காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் மூன்று ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு இளம் பெண்ணை பனி மலையுச்சிக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர வேட்டையாடி ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் கைது செய்துள்ளனர். மற்ற இரு ஆசிரியர்களும் தலை மறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை , மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் மிரட்டி வாக்குமூலம் மாற்றி சொல்ல சொன்னதாகவும் ,குற்றவாளிகளை விடுவித்ததாகவும் வதந்தி பரவியது.

இது முற்றிலும் பொய் என்றும் தேவையில்லாமல் அமைதியை சீர் குலைக்க செய்யப்பட்ட சதியே இது என்றும் போலீசார் கூறினார்கள்.
இந்நிலையில் பெண்ணை வன்கொடுமை செய்ததாக அந்த பெண் எழுத்துப்பூர்வமாக கொடுத்த புகாரின் பேரில் ,குற்றம் செய்த மூன்று ஆசிரியர்களையும் மாவட்ட கல்வி அதிகாரி பணி இடை நீக்கம் செய்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.