cow

மதுரையில் வீட்டு வாசலில் தொடர்ந்து சத்தமிட்டு இடையூறு செய்ததாக பசுவை கொடூரமாக தாக்கிய உரிமையாளர் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து கனி. இவர் அதே பகுதியில் சொந்தமாக பத்திற்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த பசுமாடு ஒன்று நீண்ட நேரமாக சத்தமிட்டுக் கொண்டிருந்தாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பசு மாட்டின் உரிமையாளர் முத்துமணி அங்கிருந்த கட்டையை எடுத்து பசு மாட்டினை மனிதாபிமானம் இல்லாமல் கொடூரமாக தாக்கினர்.

cow

இதில் படுகாயமடைந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாட்டின் உரிமையாளர் முத்துக்கனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், படுகாயமடைந்த பசுமாட்டிற்கு உரிய சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending