குருவித்துறை கோயில் மாட்டுக்கு பக்தர்கள் கண்ணீருடன் பிரியாவிடை!

Published:

kuruvithurai perumal koil kaalai
kuruvithurai perumal koil kaalai

சோழவந்தான் அருகே கோவில் மாடு உயிரிழந்த நிலையில், கிராம பொதுமக்கள் மரியாதை செய்து அதனை நல்லடக்கம் செய்தனர்.

kuruvithurai perumal koil kaalai
kuruvithurai perumal koil kaalai

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, கோவில் மாடு ஒன்று இருந்தது. இதனை கிராம மக்கள் பராமரித்து வந்தனர்.

இந்த கோவில் காளை வயது முதிர்ந்த காரணத்தால் நோய்வாய்ப்பட்டது. கிராம மக்கள் கால்நடை மருத்துவரிடம் சென்று சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கோவில் மாடு இறந்தது. இதை அடுத்து கிராம மக்கள் நான்கு தெருக்களிலும் அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்

kuruvithurai perumal koil kaalai
kuruvithurai perumal koil kaalai

பின்னர கிராம பொதுமக்கள் இறந்த கோவில் காளைக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் பொங்கல் மண்டகப்படி மைதானத்தில் கோவில் காலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது

அதன் பின்னர், அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செய்தனர். கோவில் காளை அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் கட்டப்படும் என்று கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img