கொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து!

இந்தியா சற்றுமுன்
itolizumab

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிமடைந்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு மிதமான மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க “தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக” தோல் நோய் தடிப்புத் தோல் அழற்சியைக் ( சொரியாசிஸ்) குணப்படுத்த பயன்படும் இடோலிசுமாப் என்ற மருந்துக்கு இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது ஏற்கனவே பல ஆண்டுகளாக தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க பயோகானின் அங்கீகரிக்கப்பட்ட மருந்து” என்று அதிகாரி கூறினார்.

இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) கோவிட் -19 நோயாளிகளுக்கு இடோலிசுமாப் ஊசி செலுத்த அனுமதித்துள்ளது. இருப்பினும், இது வேறு வழியில்லாத நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று டி.சி.ஜி.ஐ தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது, சாதாரண பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

இந்தியாவில் கொரோனோவைரஸ் நோயாளிகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சியில் நுரையீரல் நிபுணர்கள், மருந்தியல் நிபுணர்கள், எய்ம்ஸ் போன்றவற்றின் மருந்து நிபுணர்கள் ஈடுபட்டனர். அதில் வெற்றி கிடைத்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

பயோகான் உருவாக்கிய ஐ.ஜி.ஜி 1 மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளில், இடோலிஸுமாப் ஒன்றாகும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சோதனை அடிப்படையில் தில்லி மற்றும் மும்பை ஆகிய இரு இடங்களிலும் இடோலிசுமாப் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனாவுக்கான பல சிகிச்சை மருந்துகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன அல்லது பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. இதில், 5 மருந்துகளில், ரெம்டெசிவிர், சிப்ரெமி உட்பட மூன்று மருந்துகள் ஏற்கனவே டி.ஜி.சி.ஐ.யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.