புது தில்லி; தேசிய புகைப்படம் மற்றும் காணொளி (வீடியோ) ஒருநாள் பயிலரங்கு நாளை நடைபெறவுள்ளது. மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முதன் முதலில் நடத்தும் இந்த பயிலரங்கு புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெறும். மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் கர்னல். ராஜ்யவர்தன் ரத்தோர் இதனை துவக்கிவைப்பார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், மூன்றாவது தேசிய புகைப்பட விருதுகளில் வாழ்நாள் சாதனை விருது பெற்ற புகைப்பட கலைஞர் திரு. ராஜேஷ் பேடி உள்ளிட்ட பல வல்லுனர்கள் இந்த பயிலரங்கில் பயிற்சி அளிக்க உள்ளனர். புகைப்பட பிரிவு, பொதிகை உட்பட 25 மத்திய அரசு நிறுவனங்களின் அலுவலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். புகைப்படம் பயிலரங்கில் 100 அலுவலர்களும் காணொளி பயிலரங்கில் 40 பேர் பயிற்சி பெறுவார். இந்த துறைகளில் உள்ள நவீன தொழில்நுட்பம், அதன் பயன்பாட்டு முறை, துறை வரலாறு போன்றவை குறித்த கருத்தரங்குகள் நடைபெறும்.
