
-மா. வெங்கடேசன்
15-12-1957ம் ஆண்டு காசி விஸ்வநாதர் கோயிலில் மறக்க முடியாத சம்பவம் நடைபெற்றது.
ஆம். அன்றுதான் பட்டியல் சமூகத்தவர்கள் கோயில் உள்ளே நுழைந்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்துக்கள் எல்லோரும் சமம், இனி காசி விஸ்வநாதர் கோயிலில் தீண்டாமை இல்லை என்று அறிவிக்கப்பட்ட நாள் அது.
காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா காசி தமிழ் சங்க நிகழ்ச்சியில் கடைசிநாள் நிகழ்வாக இசை நிகழ்ச்சி நடத்த இசைஞானிக்கு அழைப்பு விடுத்தார்.
கோயிலுக்குள் உள்ள சிவன் சிலை முன்பு நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரிக்காக காசி விஸ்வநாதர் ஆலயம் சார்பில் ஏற்பாடுகள் மிக தீவிரமாக செய்யப்பட்டது.
அழைப்பை ஏற்று இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

ஆமாம். பட்டியல் சமூகத்தவர்களை காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் அனுமதித்த அதே நாள், அதே மாதம். 15-12-2022ம்நாள். அதே காசி விஸ்வநாதர் கோயில்.
அதே தேதியில்-அதே மாதத்தை – தனக்கு விருப்பமான இசைஞானியை வைத்துதான் நிகழ்த்தவேண்டும் என்று காசி விஸ்வநாதர் விரும்பினாரோ என்னவோ?
ஆனால் இந்த நிகழ்வுக்காக ஒருவரை பாராட்ட வேண்டுமென்றால் அது நம்முடைய பாரதப் பிரதமர் மோடி அவர்களைத்தான்.
அதனால்தான் மேடையிலேயே இசைஞானி இளையராஜா சொன்னார் :-
”இவ்வளவு சிறப்பை பெற்ற காசியில் தமிழ் சங்கமம் நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு எப்படி தோன்றியது என்பதை கண்டு வியக்கிறேன். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்”
இசைஞானி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. இசைஞானி ஆன்மிக காரணங்களுக்காக சொன்னார்.
நான் அதே தேதி, அதே மாதம் என்பதற்காக வியந்துபோய், நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.