முதலிரவில் தூங்கி போன கணவன்! காரணம்.. பெண் மீது மோகம் இல்லை அதிர வைத்த புதுமாப்பிள்ளை!

இந்தியா கிரைம் நியூஸ்
firstnight

திருமணத்திற்கு பிறகு முதலிரவை தொடர்ந்து தள்ளிப்போட்ட கணவனின் காரணத்தை கேட்டு, அதிர்ச்சியடைந்த மணப்பெண் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், அமெரிக்காவில் குடியுரிமை பெற்று, அங்கு பணியாற்றி வருகிறார். அவருக்கும் சொந்த ஊரைச் சேர்ந்த 25 வயது பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக, ரூ.50 லட்சம் ரொக்கம், 70 சவரன் நகையை வரதட்சணையாகப் பெற்றுக் கொண்ட அமெரிக்க மாப்பிள்ளை, திருமணத்திற்காக நாடு திரும்பினார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, அனைத்து சீதனங்களையும் கொடுத்து பெண்ணுக்கு நெருங்கிய உறவினர்களை வைத்தும் இரு வீட்டாரும் இருவருக்கும் திருமணத்தை செய்து வைத்தனர். பெண்ணும் அமெரிக்கா மாப்பிள்ளையை கட்டியிருப்பதால், இனி வாழ்க்கை இந்தியாவுக்கும், அமெரிக்காவுமானதாக இருக்கும் என நம்பி திருமண பந்தத்தில் இணைந்தார்.

திருமணம் முடிந்த கையோடு, அன்றிரவே இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளோடு இல்லற வாழ்க்கையில் நுழைந்த அந்த பெண்ணுக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்து.

முதலிரவு அன்று மனைவியை ஏறெடுத்தும் பார்க்காமல் குரட்டை விட்டு தூங்கியுள்ளார் அந்த மாப்பிள்ளை. இது ஒரு நாள் கதையல்ல. அதுவே தொடர் கதையானது. இதனால், பெரும் ஏமாற்றம் அடைந்த அந்த மணப்பெண், இந்த விஷயத்தை எப்படி வெளியே சொல்வது, சொன்னால் தன்னை தவறாக நினைப்பார்களே என்ற குத்தல் எண்ணத்துடன் தனது தோழிகளிடம் பகிர்ந்துள்ளார்.

தோழிகளின் மூலமாக இரு வீட்டாருக்கு இந்த விவகாரம் தெரிய வர, அனைவரின் கேள்விகளுக்கும் ஆளானான் அந்த புது மாப்பிள்ளை. இருப்பினும், பதிலை தொடர்ந்து தட்டிக்கழித்து வந்த மாப்பிள்ளை ஒரு கட்டத்தில் உண்மையை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் போது, தான் அங்குள்ள ஒரு வாலிபரிடம் ஓரினச் சேர்க்கையில் வசித்து வந்ததாகக் கூறி அனைவரின் மனதில் இடியை இறக்கினார். அதுவும் அந்த நபருடன் நல்ல புரிதலுடன் வாழ்க்கையை நடத்தி வருவதாகவும், இதனால், பெண்கள் மீது தனக்கு மோகம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, தான் ஓரினச் சேர்க்கை உறவு வைத்துள்ள நபருடன் சேர்ந்து, நாம் இருவரும் வாழலாம் என புதுமாப்பிள்ளை பாஸ்கரன், தனது மனைவியிடம் கூறியது உறவினர்களிடையே பெரும் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், குண்டூர் புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.