சுஷாந்தின் மரணம் தற்கொலையல்ல கொலை: நாராயண் ரானே!

இந்தியா சினிமா
sushanth

நடிகர் சுஷாந்த் விவகாரம் வேறு ஒருகட்டத்துக்கு நகர்ந்து பிஹார் அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கொல்லப்பட்டார் என்று பாஜக தலைவர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குற்றம்சாட்டும் போது, ‘மகாராஷ்டிரா அரசு யாரையோ காப்பாற்ற முயற்சி செய்கிறது’ என்று தெரிவித்தார்.

இன்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயண் ரானே, ‘சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா அரசு யாரையோ காக்க நினைக்கிறது. இந்த வழக்கில் கவனம் செலுத்தவில்லை’ என்று சாடினார்.

narayan rana - 2026

முன்னதாக சுஷாந்தின் தந்தை கேகே சிங், பிப்ரவரி 25ம் தேதியே தன் மகன் சுஷாந்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தான் மும்பை போலீஸில் புகார் அளித்தேன் ஜூன் 14ம் தேதி என் மகன் உயிருடன் இல்லை, என் பிப்ரவரி மாத புகாரில் சில பெயர்களைக் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். ஆனால் சுஷாந்த் இறந்து போய் 40 நாட்கள் ஆனபிறகும் கூட நடவடிக்கை இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.