மனைவி மற்றும் குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொன்ற கணவன்!

இந்தியா கிரைம் நியூஸ்
murder-2-1

மனைவி, இரண்டு குழந்தைகளை சுத்தியலால் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்

தில்லி புறநகரில் உள்ள ஷிவ் பார்க் குடியிருப்பு வளாகத்தில் பிரீத்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் குடியேறியுள்ளனர். பிரீத்தியின் கணவர் ககன் மதுபோதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. ப்ரீத்தியின் பெற்றோர் அவர் வசித்த பகுதிக்கு அருகில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த மனைவி ப்ரீத்தி மற்றும் 2 குழந்தைகளை ககன் சுத்தியலால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ப்ரீத்தி ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார். ப்ரீத்தியின் பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

kakan

பின்னர் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது மகனின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அதேபோல் 5 வயதான மகளையும் அடித்துக் கொன்றுள்ளார் ககன். இந்த கொடூர கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய ககனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

இது குறித்து தெரிவித்துள்ள ப்ரீத்தியின் பெற்றோர் தன் மகளை அவரது கணவர் குடிபோதையில் அடிப்பார் என்றும் ககன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.