உலக அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #IndiaSupportsCAA

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
bangladesh refugee - 2026

உலக அளவில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது #IndiaSupportsCAA

தற்போது இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரு வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டவர்கள், அண்டை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்னல்களை அனுபவித்து, அங்கிருந்து துரத்தப் படும் போது, இந்தியாவில் அகதிகளாக வருகின்றனர்.

tweet - 2026

இந்த சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்து, அவர்களுக்கு இந்திய நாட்டில் மற்ற குடிமக்களுக்கு வழங்கப் படுவது போன்ற சலுகைகள், திட்டங்களை வழங்கச் செய்ய வகை செய்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம்.

ஆனால், இந்தச் சட்டத்தில் வங்கதேசத்தில் இருந்தும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்தும் முறைகேடாகவும் திருட்டுத் தனமாகவும் இந்தியாவுக்குள் வரும் அந்நாடு முஸ்லிம்களையும் சேர்க்கவில்லை என்று கூறி, இந்திய முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

stalin pakistan - 2026

வங்கதேச குடியேறிகளால் தங்களுக்கு வாக்கு வங்கி சேர்கிறது என்பதால், அவர்களுக்கு சலுகை வழங்கவும், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவும் வலியுறுத்தி, மம்தா பானர்ஜியும், காங்கிரஸாரும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதே நேரம், முஸ்லிம்கள் பேர் வருவதால், தமிழகத்தில் திமுக., உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

before after caa - 2026

இந்நிலையில், இந்தியாவுக்கு குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சீர்திருத்தங்கள் அவசியம் என்று பொதுவான கருத்தோட்டம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடிக்கும் அதிகமாகும் என்று கணக்கீடுகள் சொல்கின்றனர்.

அதே நேரம் வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து திருட்டுத் தனமாக இந்தியாவில் குடியேறி, இந்தியாவின் சாதாரண ஏழை மக்களுக்கு வழங்கப் பட வேண்டிய சலுகைகளையும், நிதி வசதிகளையும் இவர்கள் பெற்றுக் கொண்டு, இந்தியாவின் ஏழைகள் பெற வேண்டிய வசதிகளைத் தடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வெகுகாலமாகவே எழுந்துள்ளது.

WhatsApp Image 2019 12 14 at 14.16.41 1 - 2026

இந்த நிலையில் தம் நாட்டு ஏழை மகன் பலன் பெற வேண்டும் என்றும், அந்த பலன்களை வேற்று நாட்டவர்கள் பெறக் கூடாது என்றும் யோசித்து மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று டிவிட்டர் பதிவுகளில், சிஏஏ.,வுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது என்ற டிவிட்டர் பதிவு ட்ரெண்டானது. உலக அளவில் இது முதலிடம் பிடித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.