புதிய கல்விக் கொள்கை ஏன்… பிரதமர் மோடி விளக்கம்!

modi-speech
modi-speech

புதிய கல்விக் கொள்கை ஏன் முடிவு செய்யப் பட்டது என்றும் அதன் சாதகங்களையும் விவரித்த பிரதமர் மோடி, இதில், எந்தவிதமான பாகுபாடும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப் பட்டது.
அனைத்து தரப்புகளின் கருத்துகளைக் கேட்ட பிறகு, கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டது! கல்விக் கொள்கையை அமல்படுத்துவது புதிய சவாலாக இருக்கும். கல்வி கொள்கையில் எந்தவித பாகுபாடும் இல்லை.

கல்விக்கொள்கையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தமடைந்துள்ளனர். முன்னேறிச் செல்ல சீர்திருத்தமே ஒரே வழி! தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்விக் கொள்கை குறித்து கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க வளர்ச்சியை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கை உதவும். ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சி அடைய செய்யும்! முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. இதற்காக புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்பதை இந்த சீர்திருத்தம் உறுதி செய்கிறது! வருங்கால சந்ததிகளை வரும் காலங்களில் வரும் சவால்களை சந்திக்க தயார் படுத்தும்

மாணவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
21ம் நூற்றாண்டிற்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும்! முறையான கல்வி தற்போது தேவை என்பதற்காக புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

ALSO READ:  T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

பள்ளிக் கல்வயை புதிய முறையில் வடிவமைப்பதன் மூலம் நமது மாணவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்! இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு கல்விக் கொள்கை உதவும்! தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் தான் 5ம் வகுப்பு வரையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வெறுமனே பாடங்களைப் படிப்பதைவிட கேள்வி கேட்கவும், ஆய்ந்தறியும் வகையில், புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச குடிமகன்களாக இருக்க வேண்டும். ஆனால் நமது வேர்களை மறக்கக் கூடாது!

கல்விக் கொள்கை மாற்றத்தை நாம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும்.
பாடதிட்டங்களை மாற்றுவதற்கு மாணவர்களுக்கு தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நல்ல குடிமகன்களை உருவாக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டுமானால் மாணவர்கள் சமூக சூழ்நிலையோடு மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்!

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

திறமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை நமது வளங்கள்.
தொழில்நுட்பம் மூலம் நமது சமூகத்தின் கடைகோடியில் இருக்கும் மாணவர் வரை கல்வியைக் கொண்டு செல்ல முடியும்.

கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு இடையேயான இடைவெளியை குறைக்க முயற்சி செய்யப்படும்! ஆய்வு செய்வதிலும், அதனை குறைப்பதிலும் உள்ள இடைவெளியை புதிய கல்வி கொள்கை குறைக்கிறது! கல்வியின் நோக்கமே சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிகாட்டியுள்ளார்… என்று பேசினார் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories