சாப்பாட்டில் உப்பு குறைவு! மனைவியை கொன்ற கணவன்!

Published:

murder-2-1

மும்பையின் ஜேஜே பாலம் அருகே சாலை ஓரத்தில் வாழ்ந்து வருபவர்கள் அப்துல் ரஹ்மான் – நஸ்ரத் அலியாஸ் தம்பதியினர்.

கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்றிரவு சாப்பாட்டில் உப்பு குறைவாக உள்ளதாக கூறி அப்துல் ரகுமான் தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த அப்துல் தனது மனைவியை சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், சாலை பிரிவில் அமைக்கப்பட்டிருந்த பக்காவாட்டு கல்லில் மனைவியின் தலையை இடித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், நஸ்ரத் அலியாஸை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் கொண்டு செலும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்துலை கைது செய்தனர்.

உணவில் உப்பு குறைவாக இருந்ததற்காக மனைவியை சாலையில் வைத்து கணவன் அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img