3 பேர் காரில்… உயிருடன் தீவைப்பு! விஜயவாடாவில் அதிர்ச்சி!

Published:

car-set-fire
car-set-fire
  • மனிதர்களோடு சேர்த்து கார் எரிப்பு. விஜயவாடாவில் கோர சம்பவம்.
  • விஜயவாடா நகரம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

மனிதர்களோடு சேர்த்து காரை எரித்த சம்பவம் விஜயவாடா நகரம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றுபேரை காரிலேயே இருத்தி தீவைத்துக் கொளுத்தியதில் இருவர் உயிரோடு போராடி வருகிறார்கள்.

விஜயவாடா நகரின் நட்ட நடுவில் கோர சம்பவம் நேர்ந்துள்ளது. மனிதர்களோடு சேர்த்து காரை எரித்த சம்பவம் நகரத்தில் தீவிர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைப் பூட்டிவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததில் மூவர் நெருப்பில் எரிந்து தீவிர காயங்களுக்கானார்கள்.

நிலச் செட்டில்மென்ட் விவகாரத்தில் ஆத்திரமடைந்த ஒருவர், மூவரை காரிலேயே வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். குற்றவாளியை வேணுகோபால் ரெட்டி என்று அடையாளம் கண்டுள்ளனர்.

குற்றவாளி வேணுகோபால் ரெட்டி மற்ற மூவர் கிருஷ்ணா ரெட்டி, கங்காதர், நாகமல்லியோடு சேர்ந்து லேண்ட் விஷயமாக காரில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்தி. விவாதத்தின் நடுவில் திடீரென்று கீழே இறங்கிய வேணுகோபால் ரெட்டி மூவரையும் உள்ளே வைத்து காரைப் பூட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சித்தார். திடீரென்று நெருப்பு பற்றி எரிந்தது. கார் முழுவதுமாக எரிந்து போனது. இந்த சம்பவத்தில் கிருஷ்ணா ரெட்டி கங்காதரன் நாகமல்லி மூவரும் தீக் காயத்தால் தீவிரமாக பாதிக்கப் பட்டனர். அவர்களில் நாகமல்லி, கிருஷ்ணா ரெட்டியின் நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது.

செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உதவிச் செயல்களில் ஈடுபட்டனர். தீயணைப்பு இயந்திரம் வந்து தீயை அணைத்தது.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

விஜயவாடா டிசிபி ஹர்ஷவர்தன் சம்பவ இடத்தை பரிசீலித்தார். கார் பற்றி எரியும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img