
- வாய்க்காலில் பாதாள சாக்கடையை நீரை திறந்துவிடும் மாநகராட்சி வாகனம்
- பலமுறை பொதுமக்கள் சொல்லியும் கண்டுகொள்ளாத அதிகாரி
- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்????
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியான பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் கிருதுமால் நதி ஓடுகிறது. புராண பெருமை வாய்ந்த நதி இது. இதில் தான் விஷ்ணுவின் தசாவதாரத்தில் முதல் அவதாரமான மத்ஸ்யாவதாரம் நடந்ததாக, புராணக் குறிப்புகள் உள்ளன.
இந்த கிருதுமால் நதி தற்போது மிகுந்த துர்நாற்றத்துடன் அப்பகுதியில் சாலையை கடக்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும் அளவிற்கு இருக்கிறது.
இந்த நிலையில் தினசரி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வாகனம், இதில் கழிவுநீரை கொட்டுகிறது. பலமுறை அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து தொலைபேசி வாயிலாக தகவல் கொடுத்தும் நடவடிக்கை எதுவுமில்லை.
சில நேரம் தாங்கள் இது குறித்து எடுத்து வருவதாகவும் இனிமேல் இதுபோன்று நடக்காது என்றும் சில முறை பதில் அளிக்கிறார்கள். ஆனால் மீண்டும் இதே போன்ற நிலையைத்தான் இப்போதும் பார்க்க முடிகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் இதுபோன்று கழிவு நீரை வாய்க்காலில் கொட்டு கிறார்கள். கழிவுநீர் நீரேற்று நிலையத்துக்கு இதனை கொண்டு செல்ல வேண்டியதுதானே என்று கேட்டதற்கு எங்கள் அதிகாரிகள்தான் கொட்ட சொல்லியுள்ளார்கள்; இதனால் உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என திருப்பிக் கேட்கிறார்கள்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தி கொண்டிருக்கும் ஒரு பகுதியில் மற்றொரு பகுதியில் இதுபோன்ற அசுத்தம் செய்யும் அதிகாரிகள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை சமூக ஆர்வலர்களும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை